இந்த 'சூதுகவ்வும்' நடிகர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூதுகவ்வும், ஜிகர்தண்டா, லிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கருணாகரன்.  இவர் தற்போது பொதுநலன் கருதி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடன் சந்தோஷ் பிரதாப் ஆதித் அருண் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை ஜியோன் இயக்க, ஏவிஆர் பிலிம்ஸ் சார்பாக ஏவிஆர் அன்புவேல்ராஜன் தயாரித்திருந்தார்.

Actor Karunakaran Clarifies his stand about the Police complaint

இந்நிலையில் நடிகர் கருணாகரன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் இணை தயாரிப்பாளரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து Behindwoods சார்பாக கருணாகரனிடம் விசாரித்த போது, அவர்கள் விளம்பரத்திற்காக இது போன்று செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தான் சென்னையில் இப்போது இல்லை என்றும், இதுபற்றி முழுமையான விளக்கத்தை நாளை அளிக்க விருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.