'மைண்ட் மொத்தமும் அங்க தான் இருக்கு'...அதிர்ந்த மக்கள்,சுதாரித்த பிரதமர்...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 05, 2019 11:11 AM

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி 'கொச்சிக்கு பதிலாக கராச்சி' என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உடனே என்னுடைய எண்ணம் எல்லாம் அண்டை நாடுகள் குறித்து இருப்பதால் அவ்வாறு கூறிவிட்டேன் என அவர் கூறினார்.அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

PM Modi on mixing Kochi with Karachi

குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி,அகமதாபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய மெட்ரோ சேவையை தொடங்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார்.அதனையடுத்து பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்து பொது கூட்டத்தில் உரையாற்றினார்.

இதனையடுத்து ஜாம்நகரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய மோடி 'ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடையின்'பயன்கள் குறித்து மக்களிடம் விவரித்தார்.இந்த அட்டையினை நீங்கள் வைத்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் சிகிக்சை எடுத்து கொள்ளலாம்.ஜாம்நகரில் இருக்கும் நீங்கள் மத்திய பிரதேசம் செல்லும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் நீங்கள் மீண்டும் ஜாம்நகர் வந்து தான் சிகிக்சை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.போபாலில் உள்ள ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற முடியும்.

''கொல்கத்தாவில் இருந்தாலும் சரி, கராச்சியில் இருந்தாலும் சரி'' ஆயுஷ்மான் பாரத் அட்டை இருந்தால் மட்டும் போதும் எங்கு வேண்டுமானாலும் சிகிக்சை எடுத்து கொள்ளலாம்.இதனை கேட்டு கொண்டிருந்த மக்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தார்கள்.உடனே சுதாரித்து கொண்ட மோடி,'நான் கேரள மாநிலத்தில் இருக்கும் கொச்சியை குறிப்பிடுவதற்கு பதிலாக கராச்சியை கூறிவிட்டேன்.எனது எண்ணம் முழுவதும் அண்டை நாடு குறித்த விஷயத்தில் இருப்பதால் அவ்வாறு கூறிவிட்டேன் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி கொச்சிக்கு பதிலாக கராச்சி என கூறிய வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #NARENDRAMODI #BJP #PAKISTAN #KOCHI WITH KARACHI #AYUSHMAN BHARAT SCHEME