'5 மணி காட்சிகள் தகுதியை இழந்துவிட்டது' - ஆர்.ஜே.பாலாஜியை மறைமுகமாக விமர்சிக்கிறாரா விஷ்ணு ?

Home > Malayalam Movies > Malayalam Cinema News

By |

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் படங்கள் மட்டுமல்லாமல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள படங்களுக்கும் அதிகாலை 5 மணி காட்சி திரையிடப்படுவது தற்போது வழக்கமான ஒன்றாகியுள்ளது.

Vishnu Vishal tweets about 5 AM shows on tamil cinema

அந்த வகையில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் 'எல்கேஜி' படத்துக்கும், ஓவியாவின் '90 எம்.எல்' படத்துக்கும் 5 மணி காட்சிகள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், 5 மணி காட்சி தனது தகுதியை இழந்து விட்டது என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் தருமாறு ஆர்.ஜே பாலாஜி , நான் தியேட்டர் ஓனரிடம் நேரடியாக கேட்டு உறுதி செய்துகொண்டேன். பரிந்துரையின் பேரில் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை.  தகுதியின் அடிப்படையிலேயே கிடைத்தது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை நிரூபிக்கும் வகையில் பெயர் குறிப்பிடாத ஒருவருடன்  கலந்துரையாடிய வாட்ஸ் அப் பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பின்னர் தற்போது இதற்கு பதில் தரும் வகையில் நடிகர் விஷ்ணு விஷால், 'உங்களை சுற்றிலும் உள்ளவர்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள். படங்களுக்கு வரும் முன்பு நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள், எவ்வாறு நடிகர்களுக்கு மரியாதை அளித்தீர்கள் என உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. 

எல்லோருடைய கடின உழைப்பிற்கும் அதற்கு உண்டான மரியாதையை கொடுங்கள். உங்களுக்கு மட்டுமல்ல. என்னுடைய வெற்றிக்காக மக்களின் உணர்வுகளை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி' என்று பதிவிட்டுள்ளார்.