நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடைக்கு வந்த தளபதி விஜய் பிகில் படத்தில் இடம்பெற்ற ‘வெறித்தனம்’ பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து தனது டிரேட் மார்க் வரவேற்பான ‘என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பான புல்லிங்கோக்கும்..’ என மிகவும் பஞ்ச் மோடில் தனது உரையை ஆரம்பித்தார். பின்னர், பிகில் திரைப்படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் குறித்து பேசினார்.

அட்லி
அட்லி

விஜய் - ‘சுட சுட ஆவிப்பறக்கும், அது இட்லி ஆனாலும் சரி, அட்லி ஆனாலும் சரி. 4 பால் ரெண்டு ஹாட்ரிக் அவர் அடிச்சிருக்காரு, அட்லி பண்ணிர்காரு.. பிகில் நல்லா வரும்னு நினைக்கிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நண்பா’ என்றார்.