விஸ்வாசத்தை தொடர்ந்து இந்த படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ள பிரபல நிறுவனம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'கனா' படத்துக்கு பிறகு தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் 'தும்பா'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார்.  இந்த படத்துக்கு அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைக்கின்றனர்.  இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்குகிறார்.

Thumba worldwide theatrical rights apuired by KJR Studios after Viswasam

முழுக்க முழுக்க ஃபேண்டஸி கலந்து உருவாகும் இந்த படத்தில் ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.  இந்த படத்தின் டைட்டிலை அறிவிக்கும் வண்ணம் புலியுடன் அனிருத் பங்கேற்ற வீடியோ காட்சிகள் வைரலானது.

இந்நிலையில் இந்த படத்தை உலக முழுவதும் திரையரங்க  வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. கடைசியாக இந்த நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்ட அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.