Petta USA All Banner

ஜோக்கர் ராஜூ முருகனின் எழுத்தில் உருவாகியிருக்கும் மெஹந்தி சர்க்கஸ் டீசர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
The teaser of mehandi circus is unveiled

மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிப்பதி, வேல ராமமூர்த்தி, ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கம் படம் மெஹந்தி சர்க்கஸ். இந்த படத்தை  ராஜூ முருகனின் உதவியாளர் சரவணன் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.

 

ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா இயக்கும் இந்த படத்துக்கு ராஜூ முருகன் வசனம் எழுதியுள்ளார். மேலும் ஜோக்கர், பவர் பாண்டி படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஷான் ரோல்டன் இந்த படத்துக்கு இசையமத்துள்ளார்.

 

சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அவர்களது பயணங்களின் போது ஏற்படும் அனுபவங்கள், சந்திக்கும் மனிதர்கள், காதல் போன்று உணர்வுப் பூர்வமான காட்சிகளுடன் இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக இன்று வெளியிட்டுள்ளார்.

 

ஜோக்கர் ராஜூ முருகனின் எழுத்தில் உருவாகியிருக்கும் மெஹந்தி சர்க்கஸ் டீசர் VIDEO