Petta USA All Banner

இந்தியன் 2 படத்தின் மரண மாஸ் போஸ்டர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு தனது 50 நாட்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

Terrific poster in Kamal Haasan and shankar's Indian 2

அதனைத் தொடர்ந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை  கையிலெடுத்திருக்கிறார் ஷங்கர். 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கி கமல் நடிப்பில் வெளியான இந்தியன் படம் லஞ்சம், ஊழல் போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளை முகத்தில் அறைந்தார் போல் பேசியது.

சுதந்திரப் போராட்டப் பின்னணியில் வரும் பிளாஸ்பேக் காட்சிகள் ரசிகர்களை மெய் சிலிர்க்கச் செய்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருப்பதாக ஷங்கர் அறிவித்தார். லைகா நிறுவனம் இதனை தயாரிக்க முன்வந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது. இந்த படத்தில் முதல் முறையாக ஷங்கருடன் இசையமைப்பாளர் அனிருத் கைகோர்க்கிறார்.  மேலும், பர்ஃபி, காற்று வெளியிடை போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்த ரவிவர்மன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குவதை  முன்னிட்டு லைகா நிறுவனம் இரண்டு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.