STM Banner USA
VRV Banner USA

தியேட்டர் விசிட்டுக்கு சிம்பு ரெடி- ரசிகர்கள் உற்சாகம்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வரும் பிப்.1ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாகிறது.

STR planned to visit theatres ahead of his Vanthaa Rajavathaan Varuven Release

‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. பிரபு, ரம்யா கிருஷ்ணன், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரோபோ ஷங்கர், நாசர், மொட்ட ராஜேந்திரன், விடிவி கணேஷ், மகத் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

ஃபேமிலி எண்டர்டெய்னர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை காண நடிகர் சிம்பு சென்னையில் உள்ள சில திரையரங்குகளுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

ரோகிணி சில்வர், ஜி.கே.சினிமாஸ், வெற்றி மற்றும் காசி தியேட்டர்களுக்கு நடிகர் சிம்பு திடீர் விசிட் அடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்பு ரசிகர்கள் இப்படத்தை வேற லெவலில் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.