STM Banner USA
VRV Banner USA

அசத்தலான காமெடியுடன் வந்தா ராஜாவாதான் வருவேனிலிருந்து வெளியான காட்சி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சுந்தர். சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரஸா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து நாளை வெளியாகவுள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.

Sneak peek from Sundar.C and Simbu's Vantha Rajavathaan varuven

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்திலிருந்து Sneak peek எனப்படும் சில நிமிட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த காட்சியில் யோகி பாபு, ரோபா சங்கருடன் சிம்புவின் காமெடி காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகும் படங்களில் காமெடிக்கு பஞ்சமிருக்காது. இப்போது வெளியாகியிருக்கும் இந்த காட்சிகளும் அதனை உறுதி செய்துள்ளன.

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அசத்தலான காமெடியுடன் வந்தா ராஜாவாதான் வருவேனிலிருந்து வெளியான காட்சி VIDEO