LKG சக்சஸ் பார்ட்டி- இயக்குநருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த படக்குழு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

LKG திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பிரபுவுக்கு தயாரிப்பு தரப்பில் கார் ஒன்று பரிசளிக்கப்பட்டது.

R.J.Balaji's LKG team gifts a brand new car to Director Prabhu

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் கே.ஆர்.பிரபு இயக்கிய LKG திரைப்படம் கடந்த பிப்.22ம் தேதி ரிலீசானது. இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அரசியல் காமெடி திரைப்படமான ‘எல்.கே.ஜி’ வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆர்.ஜே.பாலாஜி கதை, வசனம் எழுதி, நாயகனாக அறிமுகமான LKG திரைப்படத்தின் வெற்றியை சமீபத்தில் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

இந்த கொண்டாட்ட விழாவில் இப்படம் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குநர் பிரபுவுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விலை உயர்ந்த எக்ஸ்பிரஸ் ஹூண்டாய் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். எதிர்பாராத இந்த பரிசுக்கு இயக்குநர் பிரபு படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.