Viswasam All Banner USA
Petta USA All Banner

அஜித் மற்றும் ரஜினியுடனான பழைய புகைப்படங்களை வெளியிட்ட பிரபல இயக்குநர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தன்னுடைய நேர்த்தியான ஒளிப்பதிவால் காட்சிகளுக்கு அழகு சேர்ப்பவர் ராஜீவ் மேனன். ரோஜா, பம்பாய், கடல், குரு போன்ற படங்களை பார்த்தாலே தெரியும் ராஜீவ் மேனனின் உழைப்பு.

Rajiv Menon posted photos with Rajini and Ajith

சாதாரணமாக திருமலை நாயக்கர் மஹாலை பார்த்திருப்போம். ஆனால் அதே மஹாலை பம்பாய் படத்தில் கண்ணாளனே பாடலிலும், குரு படத்தில் ஆருயிரே பாடலிலும் அதனை மிக பிரம்மாண்டமாக காட்டியிருப்பார்.

மேலும், இயக்குநராகவும் மின்சாரக் கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற உணர்வுப்பூர்வமான காதல் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சர்வம் தாளமயம் என்ற படத்தை இயக்கியுள்ளார். 

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட திரைப்படமும், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அஜித் மற்றும் ரஜினியுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இதற்கு இருதரப்பு ரசிகர்களும் தங்கள் மகிழச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.