Reliable Software
www.garudabazaar.com

"என் பேருந்து ஓட்டுநருக்கும்.. வறுமையில் வாடும்போதும் என்னை நடிகனாக்க" - ரஜினி உருக்கம்.

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால் கலை சேவையை பாராட்டி இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாஹிப் பால்கே விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajinikanth Heartfelt tweet Dada saheb Phalke Award

இதற்கு இந்திய பிரதமர் மோடி, நடிகர் கமல்ஹாசன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து கூறிவந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்திய திரை உலகின் மிக உயரிய தாதா சாஹேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும் மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னில் இருந்த நடிப்பு திறமையை கண்டு பிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுநரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னை திரையுலகில் அறிமுகம் செய்து இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் K.பாலச்சந்தர் அவர்களுக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிகப் பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

என்னை மனமார்ந்து வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் நண்பர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் கமல் ஹாசன் அவர்களுக்கும், மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும் நண்பர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: நடிகர் ரஜினிகாந்த்துக்கு 'இந்திய அரசின்' உயரிய விருது! -  அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்      

RELATED LINKS

Rajinikanth Heartfelt tweet Dada saheb Phalke Award

People looking for online information on Dadasahebphalkeaward, Rajinikanth will find this news story useful.