Petta USA All Banner

யுவனின் இசையில் குருவிகள் பறக்கும் 'பேரன்பு' வீடியோ வெளியீடு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தரமணி படத்துக்கு பிறகு இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் படம் பேரன்பு.  தந்தைக்கும் மகளுக்குமான உறவை பேசும் இந்த படத்தில் தந்தை கதாப்பாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் அவரது மகளாக தங்கமீன்கள் சாதனாவும் நடித்துள்ளனர்.

New OST Video released Yuvan and Ram's Peranbu

மேலும் இந்த படத்தில் நடிகை அஞ்சலி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றுவருகிறது.

யுவன் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து யுவனின் இசையில் புதிய  புரொமோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் முதலில் பேசும் பாரதிராஜா என் நண்பனின் செல்லக்குட்டி யுவன் ஷங்கர் ராஜா, காப்பாத்திட்ட உங்க அப்பா பேர என பெருமை மிகுந்த வார்த்ககளுடன் இந்த வீடியோ தொடங்குகிறது.