Viswasam All Banner USA
Petta USA All Banner

விஸ்வாசத்தின் அடிச்சு தூக்கு பாடலில் தல அஜித் செய்த மேஜிக்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நாளை திரையரங்குகளில் விஸ்வாசம் வெளியாகவுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தல ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

Kalyan Master Shares his working experience with thala Ajith in Viswasam

இந்நிலையில் படத்தில் அடிச்சு தூக்கு என்ற பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குநர் கல்யாண் Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்திருந்தார்.

அப்போது விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற அடிச்சுத்தூக்கு பாடலில் அஜித்துடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில்,

விஸ்வாசம் அடிச்சு தூக்கு நல்லாவந்துருக்கு ஆளுமா டோலுமா பாடலுக்கு பிறகு அதை விட சிறப்பாக ஒரு பாடல் செய்ய வேண்டுமென அழுத்தம் இருந்தது. அந்த அழுத்த இப்போ இல்லை. அடிச்சு தூக்கு பாடலில் அஜித் அற்புதமாக ஆடியிருக்கிறார்.

இன்னும் வேணும், இன்னும் வேணும் என நடனமாடிக் கொண்டே இருந்தார்.  அவருக்கு நடனம் சொல்லிக் கொடுத்து அதை அவர் ஆடும்போது மனதில் திருப்தி ஏற்படும். வேற லெவல் ஃபீலிங் அது. அவரே சில நடன அசைவுகளை செய்வார், 

அஜித் எனக்கு சிறந்த நண்பர் . என்னுடைய அம்மா மரணிக்கும் போது அவர் தன்னுடைய காரில் தான் என்னுடைய அம்மாவின் உடலை எடுத்துச் செல்ல வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். மிகவும் நல்ல மனிதர் அவர் என்றார்.

ஏற்கனவே மங்காத்தா படத்தில் கல்யாண் நடன அமைத்த விளையாடு மங்காத்தா பாடலும், வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆளுமா டோலுமா பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

விஸ்வாசத்தின் அடிச்சு தூக்கு பாடலில் தல அஜித் செய்த மேஜிக் VIDEO