அஜித் எடுத்திருப்பது நல்ல முடிவு - பிரபல அரசியல் பிரமுகர் கருத்து

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் அஜித் குமார் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

DMK MP Kanimozhi congrats to Actor AjithKumar for his statement

அதில், நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என தீர்மானமாக உள்ளவன்.

சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்மந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.

இந்தத் தருணத்தில் நான் தெரிவிக்க விளைவது என்ன வென்றால் என்க்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் ஆர்வம் இல்லை என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழியிடம் அஜித் குமாரின் அறிக்கை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது பதிலளித்த அவர், அஜித்குமாரின் முடிவு நல்ல முடிவு அவருக்கு என் வாழ்த்துகள் என்றார்.