Petta USA All Banner

சினிமாவில் களமிறங்கிய ஜெயம் குடும்பத்தின் அடுத்த வாரிசு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் இயக்குநர் மோகன்ராஜா, நடிகர் ஜெயம் ரவி. இருவரது கூட்டணியிலும் இதுவரை வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது.

Director Mohan Raja's son Pranav Mohan made his acting debut with Vijay Antony in Thamizharasan

பிரபல எடிட்டர் மோகனின் வாரிசுகளான மோகன்ராஜாவும், ரவியும் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்த நிலையில், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தற்போது அவரைத் தொடர்ந்து இயக்குநர் மோகன்ராஜாவின் மகன் பிரணவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தமிழரசன்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் பிரணவ் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கை இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்தார். எஸ்.என்.எஸ் நிறுவனம் சார்பில் கௌசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.