பிரபல நடிகரின் டீஸரை வெகுவாகப் பாராட்டிய ரஹ்மான்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஜேஎஸ்பி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜேஎஸ்பி சதீஷ் தயாரித்திருக்கும் படம் "அசுரகுரு. இந்த படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.

AR Rahman appreciates Vikram Prabhu's Asuraguru teaser

மேலும் யோகிபாபு, ஜெகன், குமரவேல், மனோபாலா ஆகியோர் முக்கியவேடங்களில் நடித்துள்ளனர். அண்மையில் இந்த படத்தின் டீசர் வெளியானது. கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு கபிலன் வைரமுத்து, பழனிபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் அசுரகுரு படத்தின் டீசரை பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.  இதனால் அசுரகுரு படக்குழுவினர் மிகுந்த மகிழ்சியில் உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, உடுமலைப்பேட்டை, ஹைதராபாத்  போன்ற பகுதிகளில் நடைபெற்றது.  மேலும் விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.