கனா வெற்றிக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு முக்கியத்துவமான வேடங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது சிறப்பான பங்களிப்பை செய்துவருகிறார். சமீபத்தில் சிவாகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

Aishwarya Rajesh to act new telugu film after Vijay Deverakonda

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து பொங்கலை முன்னிட்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நடித்துவருகிறார். தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவர் மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த படத்தில் ஆட்டா கடரா சிவா  என்ற பட்ததில் நடித்த உதய்ஷங்கர் ஹீரோவாக நடிக்கிறார்.  இந்த படத்தை விஜய்  ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்குகிறார்.

இந்த படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, கிஃப்டான் எலைஸ் இசையமைக்கிறார்.