BEHINDWOODS COLUMN

மணிரத்னம் மில்லிமீட்டரில் புன்னகைக்கிறார்!

Home > Columns
A Tamil poem on Mani Ratnam's films on his birthday

மனோகர் புரட்சி செய்ய
வேலு நாயக்கர் வரலாறு படைக்க
அஞ்சலி அள்ளியெடுக்க
சூரியா அழ வைக்க
ரோஜா ஆசைகள் மீட்டெடுக்க
கபீரும் கமலும் கை கோர்க்க 
ஆனந்தனும் தமிழ்ச்செல்வனும் எல்லைகள் உடைக்க 
டாக்டர் சக்தி மனம் திருட
அமுதா அடம் பிடிக்க
மைக்கேல் யோக்கியம் பழக
குருநாத் கனவு காண
வீரா வெகுண்டெழ
தாமஸ் கதறி அழ
தாரா மலர்கள் கேட்ட
லீலா உண்மை உணர்த்த

மணிரத்னம் புன்னகைக்கிறார்! தன் வழக்கமான மில்லிமீட்டர் அளவில்...!

எண்ணங்கள் காடென்று
சிந்தனைகள் வெவ்வேறென்று 
அறியச்செய்து... 
பேனா மை வேரென்று
அனால் மெய் வேறென்று 
உணரச்செய்து...
கலை கனவென்று
நினைவுகள் உணவென்று
உண்மை பேசி எனை வென்று புன்னகைக்கிறார்!  

மகிழ்கிறேன். இன்னும் பல ஆச்சரியங்கள் எதிர்பார்த்து!


Respond to maathevan.bw@gmail.com
Behindwoods is not responsible for the views of columnists.
Tags : Mani Ratnam

FACEBOOK COMMENTS

ABOUT THIS PAGE

This page hosts the views of the authors of the column. The views are generally about films, movie reviews, movie news, songs, music, film actors and actresses, directors, producers, cinematographers, music directors, and all others that contribute for the success or failure of a film. People looking for movies online, movie reviews, movie analysis, public response for a movie, will find this page useful.